close
Choose your channels

'ஊருக்கு நீ போலீஸா இருக்கலாம், எனக்கு நீ போக்கிரி தான்.. விஷாலின் 'லத்தி' டிரைலர்

Monday, December 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் உருவான ‘லத்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த டிரைலரில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கொஞ்சம் ரொமான்ஸ் மற்றும் தந்தை-மகன் பாசக் காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளன.

முடிவு பெறாத கட்டிடம் ஒன்றில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன என்பதும் விஷால் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்காகவே அதிக சிரத்தை எடுத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியில் இருந்து தெரியவருகிறது

விஷாலுக்கு இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அசத்தலாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் பாடல்களும் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்த படத்தை வினோத்குமார் இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.