'மருது' கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் விஷால் காயம்

  • IndiaGlitz, [Tuesday,February 16 2016]

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'கதகளி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விஷால் நடித்து வரும் அடுத்த படமான 'மருது' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி நிலைக்கு வந்துள்ளது.

விஷாலுக்கு ஜோடியாக முதல்முறையாக ஸ்ரீதிவ்யா நடித்துவரும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கடந்த சில தினங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்ததாகவும், தற்போது கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிவு பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை விஷால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பின்போது தனக்கு சிறு காயம் ஏற்பட்டதாகவும் இருப்பினும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படப்பிடிப்பு இனிதாக முடிவடைந்ததால் தனக்கு மகிழ்ச்சியே என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, மற்றும் 'தாரை தப்பட்டை' புகழ் ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

நொச்சிக்குப்பம் மீனவ பெண்களுடன் இறுதிச்சுற்று இயக்குனர்

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் இயக்குனர் சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'இறுதிச்சுற்று' படம் மாபெரும் ஹிட்...

மஞ்சப்பை இயக்குனருக்காக காட்டுவாசியாகும் ஆர்யா

சமீபத்தில் வெளியான ஆர்யாவின் 'பெங்களூர் நாட்கள்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

த்ரிஷாவின் திடீர் அரசியல் பிரவேசம்

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தயாராகி வருகின்றனர்...

ஐங்கரனின் அடுத்த படத்தில் இணையும் 2 வெற்றி இயக்குனர்கள்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம்...

தேசிய விருது பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஜோதிகா

இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'குற்றம் கடிதல்' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றது என்பது அனைவரும் அறிவோம்...