விஷாலின் 'மருது' ரிலீஸ் தேதி உறுதியானது

  • IndiaGlitz, [Friday,May 06 2016]

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'மதகஜ ராஜா' ரிலீஸ் தேதி மே 13 என கூறப்பட்டு வந்தபோதிலும் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் விஷால் நடித்த மற்றொரு படமான 'மருது' படத்தின் ரிலீஸ் தேதியை அவர் தன்னுடைய சமூக வலைத்தில் உறுதி செய்துள்ளார்.


'மருது' மற்றும் இதன் தெலுங்கு பதிப்பான 'ராயுடு' ஆகிய திரைப்படங்கள் மே 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை விஷால் அறிவித்துள்ளார். விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதே தேதியில்தான் சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக போட்டியிட்ட விஷால் மற்றும் சிம்பு தற்போது தொழில் ரீதியாக மீண்டும் மோதவுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இளையதளபதி ரசிகனின் கதை அதரவெப்போம் - இயக்குனர் ஜான்

விஜய் ரசிகர்களை மையப்படுத்தி 'அதிரவைப்போம்' என்ற படம் தயாராகியுள்ளது என்பதும் அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது...

ஹாலிவுட் நடிகருடன் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தில் ஸ்ருதிஹாசன் அவரது மகளாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே...

சூர்யாவின் '24'க்கு கிடைத்த முதல் வெற்றி

சூர்யா மூன்று வேடங்களில் நடித்த '24' திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது....

ரஜினியை மிஞ்சிய தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே வேகம் என்று இன்னொரு அர்த்தம் கொள்ளும் அளவிற்கு அவரது ஒவ்வொரு செயலிலும் மின்னல் வேகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'. இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு விஷ்ணு நடித்த 'இன்று நேற்று நாளை' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது ஒரே நேரத்தில்...