close
Choose your channels

இளையதளபதி ரசிகனின் கதை அதரவெப்போம் - இயக்குனர் ஜான்

Friday, May 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ரசிகர்களை மையப்படுத்தி 'அதிரவைப்போம்' என்ற படம் தயாராகியுள்ளது என்பதும் அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜான் நமது இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இளையதளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கதை தான் இந்த 'அதிர வைப்போம். இந்த படம் ஒரே நாளில் நடைபெறும்படி அமைத்துள்ளோம்.
இன்றைய இளைஞர்கள் மிக அதிகளவில் நேசிப்பது விஜய் அவர்களைத்தான். நானும் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருவன். எனவே நான் படமெடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தபோது ஒரு விஜய் ரசிகன் கதையை தேர்வு செய்தேன்.
இதுவொரு விஜய்ரசிகனின் கதையாக இருந்தாலும், ரஜினி, அஜித் ரசிகர்கள் உள்பட அனைத்து நடிகர்களும் ரசிக்கத்தக்க வகையில் இந்த படத்தை எடுத்துள்ளோம்.
இந்த படத்தின் கதை குறித்து விஜய்யிடம் நாங்கள் டிஸ்கஸ் செய்யவில்லை. அவரிடம் டிஸ்கஸ் செய்யும் அளவுக்கு இந்த கதை இல்லை என்பதால் நாங்கள் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
இந்த படத்தை இயக்கியவது மட்டுமின்றி ஒரே ஒரு காட்சியில் நான் நடிக்கவும் செய்துள்ளேன்.
கே.பாக்யராஜ் அவர்களும், பட்டிமன்றம் ராஜா அவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் ஒரு தந்தை தனது மகனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக இந்த கேரக்டர்கள் மூலம் விளக்கியுள்ளோம்.
இவ்வாறு இயக்குனர் ஜான் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.