விஷால் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்?

  • IndiaGlitz, [Sunday,March 19 2023]

விஷால் நடித்த வெற்றி படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் நடிப்பில் உருவான ’அயோக்யா’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், இயக்குனர் வெங்கட் மோகன் கூறிய கதை ராகவா லாரன்ஸ்க்கு பிடித்து போனதால் உடனே இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை தமிழ் திரை உலகின் முன்னணி நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ‘சந்திரமுகி 2’ மற்றும் ’ருத்ரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன. அதுமட்டுமின்றி ’அதிகாரம்’ ’ஜிகர்தண்டா 2’ ஆகிய படங்களிலும் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இந்த நிலையில் வெங்கட் மோகன் இயக்கத்திலும் ஒரு படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

More News

பிரபல தயாரிப்பாளர் மகளை காதலிக்கின்றாரா நடிகர் அசோக் செல்வன்? எப்போது திருமணம்?

பிரபல தயாரிப்பாளர் மகளை நடிகர் அசோக் செல்வன் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'விடுதலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

பூஜையுடன் தொடங்கியது நயன்தாராவின் அடுத்த படம்.. இந்த படத்தில் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை நேற்று  நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

ரகுவரன் இன்று உயிருடன் இருந்திருந்தால்.. நினைவு தினத்தில் மனைவி ரோகிணியின் நெகிழ்ச்சியான பதிவு..!

நடிகர் ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு இதே நாளில் காலமான நிலையில் அவரது நினைவு தினத்தில் அவரது மனைவி நடிகை ரோகினி நெகிழ்ச்சியான பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'காசே தான் கடவுளடா' படக்குழு..!

 இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிய 'காசே தான் கடவுளடா' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் பல்வேறு தடைகளுக்கு பின் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி