ரஜினியின் இடத்தில் இருந்து பணியை தொடங்கும் விஷால் குழு

  • IndiaGlitz, [Tuesday,April 04 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்று அதில் விஷால் தலைமையிலான நம்ம அணி கிட்டத்தட்ட அனைத்து பதவிகளுக்கும் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவின் தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பதவியேற்பு விழா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 6ம் தேதி வியாழக்கிழமை மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான சென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பதவியேற்ற மறுநிமிடமே ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளதால், ரஜினிகாந்த் அவர்களின் இடத்தில் இருந்து விஷால் குழுவினர் தங்கள் பணியை தொடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவிற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களது குடும்பத்தோடு வர வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகள் நிர்வாகிகள் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக பணிபுரிய உள்ளதால் அனைத்து தயாரிப்பாளர்களும் இந்த விழாவிற்கு குடும்பத்துடன் வரவேண்டும் என்றும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்த ஆலோசனை இருக்கும் என்றும் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார் என்றும் விஷால் தெரிவித்தார்.

More News

'குற்றம் 23' வெற்றியால் அருண்விஜய்க்கு கிடைத்த பரிசு

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெடிக்கல் க்ரைம் படமான 'குற்றம் 23' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

'காற்று வெளியிடை' படத்தின் ரன்னிங் டைம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி வெள்ளி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்,

'தல' தோனியை தேடி வந்த சி.இ.ஓ பதவி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய தோனிக்கு பிரபல நிறுவனமான கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவி தேடி வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீனியர் காமெடி நடிகர்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

புழல் சிறையில் வைகோ. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு ஏன்?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தேச துரோக வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.