விஷால்-ராதாரவி சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Tuesday,May 10 2016]

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின்போது அரசியல்வாதிகளுக்கு இணையாக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ததை பார்த்தோம். ராதாரவி உள்பட ஒருசில நடிகர்கள் தங்கள் போட்டியாளர்களை ஒருமையில் பேசிய சம்பவங்களும் நடந்தது.

இந்நிலையில் செயலாளர் பதவிக்கு நேருக்கு நேராக மோதிய ராதாரவியும் விஷாலும் தேர்தலின்போது நடந்து கொண்ட விதத்தை பார்த்து இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் கருதப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி விஷால் தனது அடுத்த படத்திலேயே ராதாரவியை நடிக்க வைத்தார்.

'மருது' படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் காட்சியின் படப்பிடிப்பின்போது என்ன நடக்கும் என்று படக்குழுவினர் அனைவரும் பதபதப்போடு இருந்த நிலையில் 'தேர்தல் வேறு' தொழில் வேறு என்பதை விஷாலும் ராதாரவியும் நடைமுறையில் உறுதிப்படுத்தினர்.

ஆனால் இந்த படப்பிடிப்பில் விஷால் ராதாரவியை நோக்கி பேசிய ஒரு வசனம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாம். அந்த வசனம் என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று விஷால் கூறியுள்ளார். அந்த வசனம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வரும் 20ஆம் தேதி வரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷால்-தமன்னாவின் 'கத்திசண்டை' தொடங்கியது

விஷால் நடித்த 'மருது' திரைப்படம் வரும் 20ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.....

இன்னும் சில மணி நேரங்களில் 'மருது' ரிசல்ட்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மருது' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது....

எந்திரன் சாதனையை முறியடித்தது ''தெறி''

கோலிவுட் திரையுலகில் விநியோகிஸ்தர்களுக்கு அதிக லாபம் தந்த திரைப்படமாக அதாவது ரூ.55 கோடி ஷேர் கிடைத்த படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படம் இருந்தது.....

தனுஷின் 'கொடி' ரிலீஸ் தேதி?

தனுஷ் முதன்முதலாக அண்ணன், தம்பி என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்த 'கொடி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது....

ஏ.ஆர்.முருகதாஸ் சாதனையை முறியடித்த அட்லி

இளையதளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான 'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ...