விஷ்ணுவின் 2வது தயாரிப்பு படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,November 05 2016]

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷால் விஷ்ணு முதல்முறையாக தயாரித்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் 100 நாட்கள் ஓடி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாவதாக ஒரு படத்தை அவர் தயாரித்து நடிக்கவுள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியினை தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை விஷ்ணு தற்போது அறிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'கதாநாயகன்'. இதே டைட்டிலில் பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் நடித்த படம் ஒன்று கடந்த 1988ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது.
இயக்குனர் முருகானந்தம் இயக்கவுள்ள இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேதரின் தெரசா நடிக்கவுள்ளார். வழக்கமாக விஷ்ணுவின் அனைத்து படங்களிலும் நடிக்கும் சூரி இந்த படத்திலும் காமெடியில் கலக்கவுள்ளார். இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

More News

'கடவுள் இருக்கான் குமாரு' சென்சார் தகவல்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும்...

நெல்லையில் 'பைரவா' படப்பிடிப்பு. விஜய் கலந்து கொண்டாரா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில்...

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'...

அஜித்துக்கும் எனக்கும் பிடித்த ஒரு விஷயம். சஞ்சிதா ஷெட்டி

தல அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கனவுடன் பல நடிகைகள் இருக்கும் நிலையில் அவரை நேரில் சந்தித்து பேசினால் கூட போதும் என்றும் சிலர் இருக்கின்றனர்...

உறவினர்கள், நண்பர்களைவிட ரசிகர்கள் ஏன் உயர்ந்தவர்கள். விஜய் அளித்த விளக்கம்

இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்...