close
Choose your channels

விஷ்ணுவின் 2வது தயாரிப்பு படத்தின் டைட்டில் அறிவிப்பு

Saturday, November 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷால் விஷ்ணு முதல்முறையாக தயாரித்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் 100 நாட்கள் ஓடி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாவதாக ஒரு படத்தை அவர் தயாரித்து நடிக்கவுள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியினை தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை விஷ்ணு தற்போது அறிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'கதாநாயகன்'. இதே டைட்டிலில் பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் நடித்த படம் ஒன்று கடந்த 1988ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது.
இயக்குனர் முருகானந்தம் இயக்கவுள்ள இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேதரின் தெரசா நடிக்கவுள்ளார். வழக்கமாக விஷ்ணுவின் அனைத்து படங்களிலும் நடிக்கும் சூரி இந்த படத்திலும் காமெடியில் கலக்கவுள்ளார். இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.