பட்ஜெட்டை விட இரு மடங்கிற்கும் மேல் வசூல் செய்த 'கட்டா குஸ்தி': படக்குழுவினர் உற்சாகம்

  • IndiaGlitz, [Friday,December 09 2022]

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரிலீஸான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ரவிதேஜா, முனிஸ்காந்த், உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார் என்பதும் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்த படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் ரூபாய் 13 கோடி பட்ஜெட்டில் உருவாகிய நிலையில் தற்போது தமிழ் தெலுங்கில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 30 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்ஜெட்டை விட இரு மடங்கிற்கும் அதிகமாக வசூலாகியுள்ளதை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கும் நல்ல வியாபாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

மாண்டஸ் புயல் எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாக இன்று 26 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை 14 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சன்கிங் அர்ஜூன் பட நாயகிக்கு திருமணம்.. வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ!

 ஆக்சன் கிங் அர்ஜுன் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களுடன் நடித்த நடிகைக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் அதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருமணம் முடிந்த கையோடு கணவருக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா.. வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகா சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் அவர் தனது கணவருக்கு அல்வா கொடுக்கும்

உள்ளே இருந்தபோது ரக்சிதா .. வெளியேறியவுடன் குவின்ஸி.. ராபர்ட் மாஸ்டரின் பதிவு!

 பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ரக்சிதாவை காதல் பார்வையுடன் பார்த்துக் கொண்டு இருந்த ராபர்ட் மாஸ்டர், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உடன் குவின்ஸியை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில்

தட்டிவுட்டா தாறுமாரு.. அட்டி உள்ள யாரு பாரு: அஜித்தின் 'துணிவு' பாடல்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'சில்லா சில்லா' என்ற