close
Choose your channels

பட்ஜெட்டை விட இரு மடங்கிற்கும் மேல் வசூல் செய்த 'கட்டா குஸ்தி': படக்குழுவினர் உற்சாகம்

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரிலீஸான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ரவிதேஜா, முனிஸ்காந்த், உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார் என்பதும் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்த படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் ரூபாய் 13 கோடி பட்ஜெட்டில் உருவாகிய நிலையில் தற்போது தமிழ் தெலுங்கில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 30 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்ஜெட்டை விட இரு மடங்கிற்கும் அதிகமாக வசூலாகியுள்ளதை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கும் நல்ல வியாபாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment