3வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்.. 

  • IndiaGlitz, [Sunday,April 09 2023]

விஷ்ணு விஷால் நடித்த ’மோகன்தாஸ்’, ’ஆர்யான்’ மற்றும் ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கிரிக்கெட் வீரர்கள் ஆக நடிக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் பிரபல இயக்குனர் ராம்குமார் உடன் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ’முண்டாசுப்பட்டி’ ’ராட்சசன்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை அடுத்து மீண்டும் விஷ்ணு விஷால் - ராம்குமார் 3வது முறையாக இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் இது ஒரு எமோஷனல் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் டிவி நிகழ்ச்சியில் அம்பிகா-ராதா.. அவங்க நடிச்ச படத்தில் இருந்து கேள்வி கேட்ட பிரியங்கா..!

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 80களின் நாயகிகளாக இருந்த அம்பிகா மற்றும் ராதா கலந்து கொண்ட நிலையில் அதில் அம்பிகா நடித்த படத்திலிருந்து பிரியங்கா ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

கொட்டும் மழையில் நடுரோட்டில் நடந்து செல்லும் விக்கி-நயன் ஜோடி..  குவியும் பாராட்டுக்கள்..!

கொட்டும் மழையில் குடை பிடித்தபடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஹைதராபாத் சாலையில் நடந்து சென்ற வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த தம்பதியின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

5 வருடங்களுக்கு பின் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.. இன்று இரவு சூப்பர் அறிவிப்பு..!

ஐந்து வருடங்களுக்கு பின்னர் தனுஷ் அதிரடி முடிவு எடுத்துள்ளதை அடுத்து இது குறித்து அறிவிப்பு இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருவாய் கலம் ஏற ஆயிரம் வேழம் போல': ஷங்கர் மகாதேவன் சித்ரா குரலில்  'PS 2' பாடல்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

விக்ரம் பிறந்த நாளில் செம அப்டேட்.. 'தங்கலான்' ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

சியான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் கேஜிஎப் என்ற கோலார்