விஷ்ணு விஷாலின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,August 20 2017]

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். அவரது நடிப்பில் வெளிவந்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகர்கள் பட்டியலை நோக்கி அழைத்து சென்றது.

இந்த நிலையில் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்', 'பொன் ஒன்று கண்டேன்', 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', 'ராட்சஷன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'கதாநாயகன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு, கேதரின் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், சரண்யா உள்பட மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சீன் ரோல்டான் இசையமைப்பில் லட்சுமண் ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை முருகானந்தம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் விஷ்ணுவின் நிறுவனமான 'விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்' தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

25 படங்களுக்கு பின்னர் விஜய்சேதுபதிக்கு கிடைக்கும் முதல் அனுபவம்

தமிழ் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருப்பவர் என்ற பெருமையை கடந்த இரண்டு ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் 'கருப்பன்', 'அநீதிக்கதைகள்', '96', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'சீதக்காதி', 'புரியாத புதிர் என அரைடஜன் படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்...

அஜித்தின் எச்சரிக்கை மற்றும் வருத்தம் தெரிவிக்கும் அறிக்கை

அஜித் நடித்த விவேகம் திரைப்படம் இன்னும் 4 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் அஜித் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், வருத்தம் தெரிவிக்கும் வகையிலும் தனது சட்ட ஆலோசகர் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

'வேலைக்காரன்' சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த சில நாட்களகவே தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ், அஜித்தின் 'விவேகம்' பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் ஆகியவை இணையதளங்களையும் சமூக இணையதளங்களையும் ஆக்கிரமித்து கொண்டது...

முதல்முறையாக ஆத்திரம் அடைந்த கமல்: பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அதிர்ச்சி

உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் ஒருநாள் கூட அவர் பங்கேற்பாளர்கள் யார் மீது கோபப்பட்டது கிடையாது...

சன்னி லியோனுக்கு பிடித்த கொச்சி இளைஞரின் புகைப்படம்

சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொச்சிக்கு சென்றிருந்த பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு அம்மாநிலத்தின் இளைஞர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு அனைவரும் அறிந்ததே...