இப்படி ஒரு முதலிரவு சீன் எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டீங்கள் விஷ்ணு விஷால்

  • IndiaGlitz, [Wednesday,July 20 2022]

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது ’கட்டா குஸ்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் முதலிரவு காட்சி படமாக்கப்பட்டது. விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவரும் புதுமண தம்பதிகளாக இந்த காட்சியில் நடித்தனர். அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டில் மெத்தை செட்டில் விஷ்ணு விஷாலுக்கு முதல் இரவு அறையில் ஐஸ்வர்யா லட்சுமி பால் கொண்டு வந்து கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

இந்த காட்சி குறித்து விஷ்ணு விஷால் கூறிய போது ’இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ முதலிரவு காட்சிகள் இருந்தாலும் இது முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சம் கொண்ட ஒரு முதலிரவு காட்சி என்றும் பார்வையாளர்களுக்கு இந்த காட்சி வித்யாசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி வருகிறார் என்பதும் இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த ’சிலுக்குவார் பட்டி சிங்கம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், ரெடின் கின்ங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

சினிமாவில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டார் நடிகரின் பேத்திகள்!

நடிகர் நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பது தமிழ் திரை உலகம் உள்பட இந்திய திரையுலகிற்கு புதிதல்ல. சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், அமிதாபச்சன் உள்பட

யாருமே இப்ப வாயை திறப்பதில்லை: பிரபல நட்சத்திரங்களை போட்டு தாக்கும் பிரகாஷ்ராஜ்!

நடிகர் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் பீச்சில் பிகினி போட்டோஷூட்: நடிகையின் வீடியோ வைரல்!

தமிழ் நடிகை ஒருவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் பீச்சில் பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் வீடியோவை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மாஸ் நடிகர்களுக்கு இணையாக 4 மணி காட்சி: அசத்தும்  'தி லெஜண்ட்' திரைப்படம்!

 தமிழகத்தை பொறுத்தவரை மாஸ் நடிகர்களுக்கு மட்டுமே அதிகாலை 4:00 காட்சிகள் திரையிடப்படும் நிலையில் அறிமுக நடிகரான அருள் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் 4 மணி காட்சி

படத்தை விமர்சனம் செய்ய ரூ.3 லட்சம் கேட்டாரா புளுசட்டை மாறன்? பார்த்திபனின் ஆடியோ வைரல்!

பிரபல திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் படத்தை விமர்சனம் செய்ய மூன்று லட்ச ரூபாய் ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டதாக நடிகர் இயக்குனர் பார்த்திபன் ஆடியோ ஒன்றில்