'விஸ்வாசம்' 'பேட்ட' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,December 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படமும், தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படமும் வரும் பொங்கல் விருந்தாக வெளிவருவது உறுதி என்றாலும் இரண்டு படங்களின் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது.

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் சென்சார் சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களில் இரண்டு படங்களுமே ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரு படம் ஜனவரி 10ஆம் தேதியும், இன்னொரு படம் ஜனவரி 15ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவிருப்பது தற்போது உறுதியாகியுள்ள தலைவர் மற்றும் தல ஆகிய இருதரப்பு ரசிகர்களும் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க தயாராகிவிட்டனர்.

More News

'அடங்கமறு' படத்திற்கு எதிரான வழக்கில் அதிரடி உத்தரவு

ஜெயம் ரவி, ராஷிகண்ணா நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளியான 'அடங்கமறு' திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரபல நடிகர்

பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் உலகையே திரும்பி பார்க்க செய்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இந்தியில் தயாராகவுள்ளது.

பழம்பெரும் குணசித்திர நடிகர் காலமானார்

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் சீனுமோகன் இன்று காலை காலமானார்.

'கண்ணான கண்ணே' பாடல் இன்னும் டிரண்டில் இருப்பது ஏன் தெரியுமா?

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலின் லிரிக் வீடியோ நேற்று இரவு 7.15 மணிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ரஷ்யாவில் 'விஸ்வாசம்' செய்த சாதனை

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.