close
Choose your channels

'விஸ்வாசம்' 'பேட்ட' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

Thursday, December 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படமும், தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படமும் வரும் பொங்கல் விருந்தாக வெளிவருவது உறுதி என்றாலும் இரண்டு படங்களின் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது.

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் சென்சார் சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களில் இரண்டு படங்களுமே ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒரு படம் ஜனவரி 10ஆம் தேதியும், இன்னொரு படம் ஜனவரி 15ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவிருப்பது தற்போது உறுதியாகியுள்ள தலைவர் மற்றும் தல ஆகிய இருதரப்பு ரசிகர்களும் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க தயாராகிவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.