close
Choose your channels

வைட்டமின் மாத்திரைகள் Immune systemsystem-ஐ வலிமை ஆக்குமா?

Monday, July 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா நேரத்தில் சிலர் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதை வாடிக்கையாகவே ஆக்கிவிட்டனர். ஆனால் உண்மையில் வைட்டமின் மாத்திரைகள் ஒருவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை ஆக்குமா? என்பதே இங்கு சந்தேகமாக இருக்கிறது.

காரணம் ஒருவரின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும்போது தேவையில்லாம் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டால் அந்த நபருக்கு அது எந்த நல்ல பலனையும் கொடுக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர். கூடவே அந்த மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் மருத்துவர்களின் அறிவுறுத்தல் இருந்தால் மட்டும் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் உலகம் முழுக்க “வைட்டமின் சி“ பற்றிய தவறான கருத்தும் உலவிக் கொண்டு வருகிறது. அதாவது வைட்டமின் சி உள்ள எலும்பிச்சை போன்ற பழங்களை சாப்பிடும்போது அது சளி போன்ற நோய்த்தொற்றுக்கு எதிராக ஆன்டி ஆக்சிடென்டை உருவாக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மேலை நாடுகளில் அனைத்து உணவுகளிலும் எலும்பிச்சை பழங்களை சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது.

வைட்டமின் சி பற்றிய இந்தக் கருத்தை நோபல் பரிசு பெற்ற லினஸ் பாலிங் என்பவர் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து கடந்த 2013 ஆம் ஆண்டு மறுஆய்வு செய்யப்பட்டபோது இந்தக் கருத்தில் உண்மை இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கோச்ரானே எனும் விஞ்ஞானிகளின் குழு, சளி மற்றும் சுவாசப் பிரச்சனைகளை வைட்டமின் சி குணப்படுத்துகிறது என்பதில் உண்மை இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டது. இதற்காக சளி தொல்லை, சுவாசப் பிரச்சனை இருக்கும் பல ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கு வைட்டமின் சி கொண்ட உணவுப்பொருட்கள் கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது அது பலனை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவா வைட்டமின் குறைபாடு என்பது சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு வருகிறது. மேலும் தாவர உணவை மட்டும் உண்ணும் பழக்கமுடைய சிலருக்கு இதுபோன்ற குறைபாடுகள் வருகின்றன.

மேலும் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில் வைட்டமின் டி நேரடி பங்கு கொண்டு இருக்கிறது. இதனால் “வைட்டமின் டி“ குறைபாடு உள்ளவர்கள் மட்டும் அதற்காக மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மருத்துவர்கள் கூறிய அறிவுரையைத் தொடர்ந்து சிலர் தேவையற்ற வைட்டமின் மாத்திரைகளை அட்டை அட்டையாகச் சாப்பிடவும் தொடங்கி விட்டனர். இதனால் வைட்டமின் மாத்திரைகள் குறித்த விழிப்புணர்வு தற்போது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

சுவாசப் பிரச்சனைகளுக்காக மட்டும் “வைட்டமின் டி“ மாத்திரைகளை ஒரு நபர் தனியாக உட்கொள்ளலாம் என்று யேல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வல்லுநர் அகிகோ இவாசகி தெரிவித்து உள்ளார்.மேலும் கொரோனா போன்ற நோய்த்தொற்றுக்கு எதிராக எந்த ஒரு மருந்தும் ஒருவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக மாற்றாது என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது என்றால் முதலில் அந்த நபரின் தோல், காற்றோட்ட பாதைகள், சளிம சவ்வுகள் போன்றவை எதிர்ப்பு அரணாகச் செயல்படும். இந்த எதிர்ப்பு அரணைத் தாண்டியும் அந்த நபரின் உடலில் கொரோனா வைரஸ் உள்ளே புகுந்து விட்டால் அவரது உடல் வைரஸ்க்கு எதிராக எதிர்வினை ஆற்றும்.

அதாவது அவரது உயிரணுக்கள் (செல்கள்) எச்சரிக்கை சமிக்ஞையை அனுப்பி வைரஸ்க்கு எதிரான வேதிப்பொருளை உண்டாக்கும். இந்த நோய் எதிர்ப்பு எதிர்வினையைத்தான் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் செய்கிறது. இப்படி ஒரு நபரின் உடலில் வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடிஸ் உருவாவதற்கு ஒரு நாள் ஏன் சில சமயங்களில் ஒரு வாரம் கூட ஆகலாம். ஆனால் அப்படி உண்டாகும் வேதிப்பொருள் (ஆன்டிபாடிஸ்) உடனே கொரோனா போன்ற வைரஸ்களை அழிக்கும் ஆற்றலை பெற்றிருக்காது.

இதற்காகத்தான் கொரோனா தடுப்பூசியை நாம் செலுத்திக் கொள்கிறோம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது சிலருக்கு சளி, காய்ச்சல், உடல்சோர்வு, அழற்சி போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. அதாவது நமது உடலில் செத்த நிலையிலோ அல்லது உயிருடனோ வீரியம் குறைக்கப்பட்ட கொரோனா வைரஸ், தடுப்பூசி மூலமாகச் செலுத்தப்படுகிறது.

இப்படி செலுத்தும்போது நமது உடல் அந்த தடுப்பூசி வைரஸ்க்கு எதிராக செயலாற்றும். இதனால் அந்த வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடிகளை நமது நோய் எதிர்ப்பு மண்டலம் உற்பத்தி செய்யும்.

மேலும் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் இதேபோன்று ஒரு முறை, ஒரு வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க கற்றுக் கொண்டுவிட்டால் வாழ்நாள் முழுக்க அந்த வைரஸைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயலாற்றும். இந்த அடிப்படையில் தான் ஒரு நோயை எதிர்க்க முடியுமே தவிர வேறு எந்த மருந்து, மாத்திரைகளும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவோ, அல்லது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவோ முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.