'விவேகம்' படத்தின் 'தலை விடுதலை' பாடல் வரிகள்

  • IndiaGlitz, [Monday,July 10 2017]

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தின் சிங்கிள் பாடலான 'தலை விடுதலை' பாடல் நேற்று வெளியானது. வெளியான முதல் நிமிடத்தில் இருந்தே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆன இந்த பாடல் அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் சிறுத்தை சிவா எழுதிய இந்த பாடலின் வரிகளை தற்போது பார்ப்போம்.

தலை விடுதலை விழிகளில் பாரடா

பகை அலறிட கதறிட போரடா

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தலை விடுதலை விழிகளில் பாரடா

பகை அலறிட கதறிட போரடா

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறுவோம்

கால்களில் கீழே நீ ஏறு ஏறு

பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும்போது

தோள்களில் கீழே நீ ஏறு ஏறு

உயிர் குருதியில் உறுதியை சேரடா

திசை எங்கிலும் எல்லைகள் மீறடா

நெவர் எவெர் கிவ் அப்

வேகம் என்னும் தீயிலே எண்ணெய் ஊற்று

நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு

ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து

ரத்த நாளம் எங்கிலும் வேகம் ஏற்று

படை நெருங்கிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே

கடை நொடிப்பகை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே

தலை விடுதலை விழிகளில் பாரடா

பகை அலறிட கதறிட போரடா

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தடை சிதறிட உடைபட ஏறடா

விடை வீரமே உலகெல்லாம் கூறடா

More News

விஜய்சேதுபதி-மாதவன் நடிக்கும் 'விக்ரம் வேதா: திரை முன்னோட்டம்

கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் 'ஓரம்போ', 'வா' ஆகிய படங்களை ஏற்கனவே இயக்கியுள்ள நிலையில் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் 'விக்ரம் வேதா'.

'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்': திரை முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகம் தற்போது த்ரில்லர்+காமெடி டிரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் இந்த டிரெண்டிங்கில் உருவாகியுள்ள இன்னொரு படம் தான் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற படம்

கிருஷ்ணாவின் 'பண்டிகை' திரை முன்னோட்டம்

அலிபாபா', 'கழுகு', 'யட்சன்' உள்பட பல படங்களில் நடித்தவரும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான கிருஷ்ணா நடித்துள்ள அடுத்த படம் 'பண்டிகை'.

எனக்கும் ஆசைதான்! ஆனால் நடக்குமான்னு தெரியலை: காலா குறித்து தனுஷ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து வரும் 'காலா' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துவிட்ட நிலையில் மிக விரைவில் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ஷான் ரோல்டன் ஒரு மிகப்பெரிய பிரபலத்தின் பேரன்: ரகசியம் உடைத்த தனுஷ்

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித்த 'விஐபி 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்து தனுஷ் ஒரு முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்தார்.