நீதான் எங்கள் விருது. உனக்கெதற்கு விருது? விவேக்

  • IndiaGlitz, [Tuesday,March 29 2016]
ஷங்கரின் பிரமாண்ட படமான 'ஐ' படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக உடலை பெருக்கி, சுருக்கி மருத்துவ உதவியுடன் கூடிய பல ரிஸ்க்கான பயிற்சிகள் எடுத்து நடித்த விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்காதது விக்ரமுக்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கே ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இதுகுறித்து கூறியபோது விக்ரமுக்கு தேசிய விருது கொடுக்காததால் விக்ரமுக்கு எந்த நஷ்டமும் இல்லை. தேசிய விருதுக்குத்தான் நஷ்டம் என்று கூறியிருந்தார்.

இதேபோல் பல கோலிவுட் கலைஞர்கள் விக்ரமுக்கு விருது கிடைக்காதது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது நகைச்சுவை நடிகர் விவேக்கும் தனது பங்கிற்கு இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
விவேக் தனது சமூக வலைத்தளத்தில் "நண்பா விக்ரம்,"ஐ" காக உடலை பெருக்கினாய்; பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்; உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது! என்று கூறியுள்ளார். விவேக்கின் இந்த பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

More News

'நூறாண்டு கால' பாடகியின் துயர் துடைத்த விஷால்

நடிகர் சங்க செயலாளர் விஷால் பதவியேற்றதில் இருந்து திரைப்படத்துறையில் பல சாதனைகள் செய்து தற்போது வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு...

'தெறி' படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதையும் இந்த படம் இவ்வாரத்திற்குள்...

'தெறி' வியாபாரத்தில் நுழைந்தது 'ஐங்கரன்' நிறுவனம்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படத்தின் சென்சார் இந்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும்...

ஹன்சிகா, ஹன்சிகாவாகவே நடித்திருக்கும் படம் எது தெரியுமா?

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா நடித்துள்ள 'உயிரே உயிரே' படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்...

சூர்யாவின் '24' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்...