போதைப்பொருள் விவகாரம்: அஜித் பட வில்லன் வீட்டில் ரெய்டு!

போதைப்பொருள் விவகாரம் பாலிவுட் திரை உலகை மட்டுமன்றி கன்னடத் திரையுலகிலும் ஆட்டுவித்து வருகிறது என்பது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ரானி ஆகியோர் போதைபோருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உள்பட ஒரு சில நடிகைகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் அஜித் நடித்த ’விவேகம்’ மற்றும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான விவேக் ஓபராய் பெயரும் இந்த போதை பொருள் விவகாரத்தால் அடிபடுகிறது. நடிகர் விவேக் ஓபராய் உறவினர் ஆதித்யா ஆல்வா என்பவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக போதைப்பொருள் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் விவேக் ஓபராய் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விவேக் ஓப்ராய் உறவினர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வீட்டில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சோதனை நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

விஷாலின் 'சக்ரா' வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை வரும் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது

பிக்பாஸ் ரம்யா ஆர்மிக்கு இன்ப அதிர்ச்சி: வெளியானது அதிரடி அறிவிப்பு

பிக்பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் முதல் நாள் முதலே சிரித்த முகத்துடன் உள்ளார். யாருடனும் வம்புக்கும் போகாமல் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும்

சொந்தமா ஒரு கார்கூட வச்சிக்கல… பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு… வைரலாகும் தகவல்!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது அமைச்சரவை சாகக்களுடன் சேர்ந்து தனது சொத்துகள், முதலீடுகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை தானாக முன்வந்து அறிவித்து

வெறித்தனமான கட்டிப்பிடி: சனம்ஷெட்டியிடம் எல்லை மீறினாரா வேல்முருகன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த ஒரு டாஸ்க்கில் சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் உள்ள இருவரையும் வரும் வாரம் யாரும் நாமினேஷன் செய்யக்கூடாது

'நமத்து போன பட்டாசு': அவார்டு கொடுத்து தூண்டிவிட்ட அர்ச்சனா: 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று புதுவரவாக உள்ளே வந்துள்ள அரச்சனா முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கலக்கிவிட்டார். குறிப்பாக அனைவருக்கும் சவாலாக இருந்த போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை அவர் முதல் நாளே