விவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு!

  • IndiaGlitz, [Sunday,April 18 2021]

நடிகர் விவேக் நேற்று காலமான நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் விவேக்கின் மனைவி அருள்செல்வி, கணவரின் மறைவிற்கு பின் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என் கணவரை நான் இழந்து நிற்கும் இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாகவும் ஒரு மிகப்பெரிய துணையாகவும் நின்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி.

என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதை என்றும் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம், நீங்கள் கொடுத்தது என் கணவருக்கு மிகப்பெரிய கவுரவம். அடுத்து காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. கடைசி வரைக்கும் நீங்கள் எங்களுடன் நின்றீர்கள், ரொம்ப ரொம்ப நன்றி. ஊடகத்துறையில் இருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றி. நேற்று என் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கடைசி வரைக்கும் வந்த அவருடைய கோடான கோடி ரசிகர்களுக்கு என்றும் எங்கள் நன்றி’ என விவேக் மனைவி அருள்செல்வி கூறினார்.

More News

விவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்!

விவேக்கின் ஒரு கோடி மரம் நட வேண்டும் என்ற கனவை நாங்கள் நிறைவேற்றுவோம் என விஜய் ரசிகர்கள் சபதம் ஏற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா சமீபத்தில் சமந்தா போலவே காஸ்டியூம் அணிந்து போட்டோஷூட் எடுத்த புகைப்படங்கள் வைரலானது

எப்படிப்பா மனசு வருது உங்களுக்கு? ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்!

தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த ரசிகர்களை 'எப்படிப்பா உங்களுக்கு மனசு வருது' என கடிந்து கொண்ட குக் வித் கோமாளி புகழால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால்

யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமான நிலையில் அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரபலங்களும்,