VSOP நடிகைக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி திடீர் திருமணம்.

  • IndiaGlitz, [Tuesday,August 11 2015]

பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த 'தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை பானு, அதன் பின்னர் அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர், மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா போன்ற பல படங்களில் நடித்தார். மேலும் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' என்ற படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில் நடிகை பானுவுக்கும் பிரபல மலையாள பின்னணி பாடகி ரிமி டோமி அவர்களின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் வரும் 23ஆம் தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. மேலும் வரும் 30ஆம் தேதி திருமணம் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. இது ஒரு காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது பானு, பாபிசிம்ஹாவின் பாம்புச்சட்டை மற்றும் சகுந்தலாவின் காதலன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பு தொடரும் என்று பானு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

More News

ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியின் செளகார்பேட்டை யின் இந்தி டைட்டில்

கடந்த சில மாதங்களாக பேய்ப்பட சீசனில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமா உலகின் அடுத்த பேய்ப்படம் 'செளகார்பேட்டை". இரண்டு வேடங்களில் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி, விவேக்...

அதர்வா நடிக்கும் 'ருக்குமணி வண்டி வருது' படத்தின் கதை?

அதர்வா, ஆனந்தி நடிப்பில் கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட 'சண்டிவீரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

அஜீத்-விஜய் இயக்குனர் படத்தில் வில்லனாகும் பார்த்திபன்

விஜய், அஜீத், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி கொடுத்த இயக்குனர் பேரரசு கடந்த சில வருடங்களாக படங்கள் எதையும் இயக்காமல் இருந்தாலும்...

பிரசன்னா-சினேகா தம்பதிக்கு ஆண் குழந்தை

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான பிரசன்னா-சினேகா தம்பதிக்கு இன்று அதிகாலை ஆண்குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

ரஜினி-அஜீத்-விஜய் குறித்து குஷ்பு

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் நடிகை குஷ்பு. அவருக்கு கோவில் கட்டிய வரலாறும் தமிழகம் ...