கமலுக்கு பின்னால் திரையுலகமே திரண்டு நிற்கும். விஷால்!

  • IndiaGlitz, [Saturday,July 15 2017]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு சர்ச்சையாகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். முதலில் மிமி கிரியேட்டர்களின் கலாய்புக்கு ஆளான இந்த நிகழ்ச்சி பின்னர் போலீஸ் புகார், கைது செய்ய வலியுறுத்தல் என்ற அளவுக்கு சீரியஸ் ஆகிவிட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் ஒரு அமைப்பு நேற்று கமல் வீட்டு முன் போராட்டம் நடத்தினர். கமலுக்கு எதிராக ஒரு குரூப் கிளம்பியிருக்கும் நிலையில் அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் திரையுலகமே அவருக்கு பின்னாள் திரண்டு நிற்கும் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறியுள்ளார்.

நேற்று தலைமைச்செயலகத்தில் தமிழக அரசு அறிவித்த விருது அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து கொண்ட விஷால், பின்னர் செய்தியாளர்களிடம் கமல் பிரச்சனை குறித்து கூறியபோது, 'கமல்ஹாசன் ஒரு விஷயத்தில் இறங்கினால் அதுகுறித்து முழுமையாக தெரிந்து கொண்டுதான் இறங்குவார். பிக்பாஸ் என்பது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. தவறான நிகழ்ச்சி என்றால் கமல் கண்டிப்பாக அதில் பங்கேற்க மாட்டார். அதே நேரத்தில் அவரை ஒருமையில் பேசியதை அமைச்சர் தவிர்த்திருக்கலாம். மேலும் கமல்ஹாசனுக்கு ஒரு பிரச்சனை என்றால் திரையுலகமே அவர் பின்னாள் நின்று ஆதரவு வழங்கும்' என்று கூறினார்.

More News

யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டேன். மகளிர் ஆணையத்திற்கு கமல் பதில்

சமீபத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கு சம்பந்தமாக அவரது பெயரை கூறி கருத்து சொன்ன கமல்ஹாசனுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்பது குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்...

விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த 'சரஸ்வதி'

இந்தியா விண்வெளித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வரும் நிலையில் புனேவில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு அதிக அடர்த்தி கொண்ட கேலக்ஸி என்று கூறப்படும் புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு விஞ்ஞானிகள் சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர்.

மலையாள நடிகை வழக்கு: நடிகர் திலீப்புக்கு மேலும் ஒருநாள் காவல் நீடிப்பு

பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறத்தல் வழக்கில் கடந்த 11ஆம் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறைக்கு அனுமதி அளித்து அங்காமலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மலையாள நடிகை கடத்தல் விவகாரம்: கமல்ஹாசனுக்கு நோட்டீஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி குறித்து ஒரு அமைப்பு போலீஸ் புகார் கொடுத்ததற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நேற்று முன் தினம் இரவு கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்...

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரை மிரள வைத்த தல அஜித்!

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கியமான பைக் ஸ்டண்ட் குறித்து இயக்குனர் சிவா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கியுள்ளார்...