25 வயது இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர் கைது!

  • IndiaGlitz, [Friday,December 18 2020]

25 வயது இளம் நடிகைக்கு 25 வயது இயக்குனர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உடுமலைப்பேட்டையை சேர்ந்த 25 வயது ரஞ்சித் என்பவர் ‘மூன்று பேர்’ என்ற வெப்தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் கதாநாயகியாக 25 வயது இளம் நடிகை ஒருவர் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இந்த வெப்தொடரின் படப்பிடிப்பின்போது இயக்குனர் ரஞ்சித் அந்த நடிகையிடம் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்ததாகவும் அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து பல முறை இதனை கண்டித்த நடிகை, ஒரு கட்டத்தில் ரஞ்சித் எல்லை மீறிப் போகவே கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இயக்குனர் ரஞ்சித் மற்றும் அவருடைய உதவி இயக்குனர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் நடிகைக்கு ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

இளம் நடிகை ஒருவருக்கு இயக்குனர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டு இருப்பது கோலிவுட்ட்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய பிக்பாஸ் கவர்ச்சி நடிகை! வைரல் வீடியோ!

நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்

பிக்பாஸ் ரியோவுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி: என்ன தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'

மதுவிருந்தில் கலந்து கொண்ட பெண் டி.எஸ்.பி மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?

மது விருந்தில் கலந்து கொண்ட பெண் டிஎஸ்பி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது பெங்களூர் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் தமிழ் நடிகை!

அந்தரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு யோகா செய்யும் தமிழ் நடிகையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

கைலாசாவிற்கு செல்லும் வழிமுறை இதுதானா??? நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!!!

பரமசிவனின் அம்சம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் நித்யானந்தாவை பற்றிய சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது.