close
Choose your channels

அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் தமிழ் நடிகை!

Friday, December 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அந்தரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு யோகா செய்யும் தமிழ் நடிகையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால் என்பதும் இவர் நடித்து முடித்துள்ள ’அதோ அந்த பறவை போல’ என்ற திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்தியில் சூப்பர் ஹிட்டான அடல்ட் காமெடி திரைப்படமான ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது அமலாபால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வரும் அமலாபால், சற்று முன்னர் தலைகீழாக துணியில் தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதேபோல் துணியில் உதவியால் அந்தரத்தில் உட்கார்ந்து கொண்டு யோகா செய்யும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படம், வீடியோவுக்கு ரசிகர்கள் வித்தியாசமான சுவாரஸ்யமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.