பப்ஜி தடை எதிரொலி: 21 வயது ஐஐடி மாணவர் தற்கொலை!

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

கடந்த சில வாரங்களாகவே இந்திய மற்றும் சீன நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதை அடுத்து சீனாவின் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. ஏற்கனவே டிக் டாக் உள்பட 59 செயலிகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு தடை விதித்த நிலையில் சமீபத்தில் பப்ஜி உள்பட 118 செயலிகள் தடைசெய்யப்பட்டது

இந்தியாவில் பப்ஜி விளையாட தடை செய்ய வேண்டும் என ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த விளையாட்டு தடை செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதே நேரத்தில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பல இளைஞர்கள் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 21 வயது ஐஐடி கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது அவர் தினமும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் பப்ஜி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும், கடந்த வாரம் பப்ஜி தடை செய்யப்பட்டது முதலே சோகமாக இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பப்ஜி விளையாட்டு தடை காரணமாக ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

இட்லி, வடை, சாம்பார் சாதம்: சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதியின் சாப்பாடு!

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதிக்கு காலையில் இட்லி வடை, மதியம் சாம்பார் சாதம் அளிக்கப்படுவதாக ஜெயில் வட்டாரங்களிலிருந்து

அதிக விஷமுடைய கட்டுவீரியன் பாம்பு குட்டியை விழுங்கிய குழந்தை!!! பரபரப்பு சம்பவம்!!!

உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒருவயது குழந்தை ஒன்று அதிக விஷமுடைய கட்டுவீரியன் பாம்பு குட்டியை விழுங்கியச் சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐந்து மாதங்களுக்குப் பின் ஓடத் தொடங்கிய மெட்ரோ ரயில்: இயல்பு நிலைக்குத் திரும்பியது சென்னை 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது

சம்யூக்தாவிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்: முடிவுக்கு வந்தது பூங்கா விவகாரம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரு பூங்காவில் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததாகவும், அவர் அதிக சத்தத்துடன் பாடலை போட்டு கொண்டே

உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தகுதி இழப்பு: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அதிர்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.