ஒரு ரன்னில் தோல்வி: குட்டிப்பாப்பாவின் வேண்டுகோளை ஏற்றாரா தோனி?

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்ற நிலையில் விஸ்வரூபம் எடுத்தார் தல தோனி. கடைசி ஒரு ஓவரில் 26 ரன்கள் என்ற நிலையில் 4,6,6,2,6 என ஐந்து பந்துகளில் 24 ரன்கள் அடித்த தோனி, கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்க தவறியதால் நூலிழையில் சிஎஸ்கே அணி வெற்றியை தவறவிட்டது.

இந்த நிலையில் சிஎஸ்கே 8 பந்துகளில் 27 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில், மைதானத்தில் இருந்த ஆர்சிபி ரசிகையான குட்டிப்பாப்பா ஒருவர் ஒரு பதாகையில் 'ஹேய் தோனி, எங்கள் விராத் வெற்றி பெற வேண்டும்! ப்ளீஸ்' என்று எழுதியிருந்தார். இந்த பதாகை நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு வைரலானது. குட்டிப்பாப்பாவின் ஆசை நிறைவேறவேண்டும் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

குட்டிப்பாப்பாவின் ஆசையை நிறைவேற்றவே 5 பந்துகளில் 24 ரன்கள் அடித்த தோனி, ஒரு பந்தில் இரண்டு ரன்களை அடிக்க தவறியுள்ளார். 'இந்த குட்டி பாப்பாவுக்காக தோனி எத்தன தடவ வேணும்னாலும் தோக்கலாம், அதேவேளையில் கோலி இனிவரும் அனைத்து போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துகள்' என ரசிகர் ஒருவர் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்துள்ளார்.

More News

மனைவி, குழந்தைகளை கொலை செய்து வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய சாப்ட்வேர் எஞ்சினியர்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிதாபாத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் அதன் வீடியோவை

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: பூசாரி கைது!

திருச்சி அருகே உள்ள துறையூர் முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் விழாவின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

35 நாட்களில் முடிவுக்கு வந்தது ஜோதிகாவின் அடுத்த படம்!

'36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, அதன்பின்னர் 'மகளிர் மட்டும், 'நாச்சியார்', 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி'

'காமசூத்ரா' நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்

3D டெக்னாலஜியில் உருவான காமசூத்ரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சாய்ராகான் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டிக் டாக் செயலியின் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் 

'டிக்டாக்' செயலியால் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்களால் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும், இதில் உள்ள வீடியோக்கள் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாலும்