close
Choose your channels

இந்திய - சீன எல்லையில் நடப்பது என்ன??? சீன வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்!!!

Tuesday, June 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய - சீன எல்லையில் நடப்பது என்ன??? சீன வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்!!!

 

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த மாதத்தின் தொடக்கம் முதலே சீன இராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது. இதனால் லடாக் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவியது. இந்நிலையில் இந்தியாவின் துருப்புகள் எல்லைப் பகுதிகளில் அதிகரித்து இருப்பதாக சீன வெளியுறவுத் துறை குற்றம் சாட்டவும் தொடங்கியது. தொடர்ந்து இந்திய இராணுவம் சீன இராணுவத்துடன் பேச்சு வார்த்தைக்கு முயசித்தும் தோல்வியை சந்தித்தது.

மே 5, 6 ஆம் தேதிகளில் சீனா இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவும் இராணுவ வீரர்களை குவிக்க ஆரம்பித்தது. இதற்கு லடாக் பகுதியில் உள்ள பாங்காங் ஏரியில் இந்தியா அதிகளவு சாலைகள் மற்றும் பாலங்களை கட்டியதே பிரச்சனைக்கு காரணமாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. அதற்கு முன்னதாக சீனா அந்தப் பகுதிகளில் அதிகளவு சாலைகளை ஏற்கனவே அமைத்து இருப்பதாகவும் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் சாலைகளை அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1962 முதல் காஷ்மீர் பகுதியில் உள்ள அக்சய்சன் பகுதிக்கும் இருநாடுகளும் சொந்த கொண்டாடி வருகின்றன.

கார்பன் பள்ளத்தாக்கில் இந்தியாவும் சீனாவும் சுமார் 3,488 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியைப் பகிர்ந்து கொண்டு இருக்கின்றன. இந்த எல்லைப் பகுதி ஜம்மு, சிக்கிம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களை தொட்டுச் செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1962 இல் இந்தியாவும் சீனாவும் போட்டுக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி எந்த துப்பாக்கிச்சூடு போர் போன்ற பதற்றங்கள் இல்லாமல் இருந்து வருகிறது. அவ்வபோது எல்லைப் பகுதி ஆக்கிரமிப்பு குறித்து இருநாட்டு இராணுவ வீரர்களும் சலசலப்பில் ஈடுபடுவது வழக்கம். அப்படியான சலசலப்பாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த மே மாதம் முதல் நடந்து வரும் விவகாரங்கள் இருநாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் இருப்பதாக உலக நாடுகளே கவனிக்கும் அளவுக்கு முற்றியது.

முன்னதாக காணொலி காட்சி மூலம் இந்தியாவின் சார்பில் சீனாவுடன 12 சுற்று பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. எந்த இறுதி முடிவுகளும் எட்டப்படாத நிலையில் ஜுன் 6 ஆம் தேதி இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் சீனாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதியான மால்டோவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இந்திய சீன எல்லை விவகாரத்தை முற்றுக்குக் கொண்டு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப் பட்டது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும் சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின்னும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, “லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் “எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணித்து அமைதி வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண சீனாவும் இந்தியாவும் சம்மதித்துள்ளன. தூதர ரீதியிலும் ராணுவ ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மால்டோ பகுதியில் நடைபெற்ற பேச்சுவார்தையில் நடந்தது என்ன? இறுதி முடிவு எட்டப்பட்ட விவகாரம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சூன்யிங், பெய்ஜிங்கில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் “சீனா இந்தியா இடையிலான எல்லை பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்படும். தற்போது எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. கடந்த 6 ஆம் தேதி நடந்த பேச்சு வார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இரு நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் முறைப்படி அமல்படுத்தப்படும். எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாடுகளும் இணைந்து செயல்படும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் இன்னும் சில தகவல்களையும் வெளியிட்டு இருக்கின்றன. அதில் “கடந்த அக்டோபரில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் சென்னையில் சந்தித்துப் பேசினர். அப்போது கருத்து வேறுபாடுகள் பிரச்சனைகளாக மாற இரு நாடுகளும் அனுமதிக்கக் கூடாது என்று ஒருமனதாக முடிவெடுக்கப் பட்டது. அதன் அடிப்படையில் எல்லைப் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், “சீனா இந்தியா இடையிலான ராணுவ கமாண்டர்களின் பேச்சு வார்த்தையில் சுமூக தீர்பு எட்டப்பட்டது. இதன்காரணமாக டோக்லாம் போன்ற பதற்ற சூழ்நிலை உருவாவது தடுக்கப்பட்டுள்ளது. எனினும் சில குழப்பங்களால் இன்னும் சிறிது காலம் லடாக் எல்லையில் ராணுவ ரீதியிலான பதற்றம் நீடிக்கலாம். அதன்பிறகு பதற்றம் தணியும்” என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும் போது இந்தியா, சீனா இருநாடுகளுமே எல்லையில் குவித்துள்ள படைகளை படிப்படியாக வாபஸ் பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கையெழுத்தாகி இருக்கிற புரிர்ந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இனிமேல் எல்லை விவகாரங்கள் அணுகப்பட இருக்கின்றன என்றும், பதற்றமான சூழ்நிலையை இனிமேல் இரு நாடுகளும் அனுமதிக்காது எனவும் பல்வேறு கட்ட பேச்சு வாத்தையின் மூலம் ஒருவழியாக முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சீன ஆப்களையும் செயலிகளையும் தரவிறக்கம் செய்யக்கூடாது, பொருட்களை வாங்கக்கூடாது என தேசிய உணர்வு பொங்கும் கருத்துகளை இந்தியாவில் வெளியிட்டும் வருகின்றனர். இது இருநாடுகளின் எல்லை விவாகரம் மட்டுமல்ல பெரிய அளவிலான பொருளாதார பிணைப்பும் இதில் உள்ளடங்கி இருக்கிறது என்பதை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.