அடக் கொடுமையே இதுவும் போச்சா??? கொரோனா விஷயத்தில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட விஞ்ஞானிகள்!!!


Send us your feedback to audioarticles@vaarta.com


பொதுவாக வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டு அந்நோயில் இருந்து மீண்டவரது உடலில் நோய்த்தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடிகள் இருக்கும். அதனால் மீண்டும் அந்நோய்த்தொற்று வராது எனப் பொதுவாக நம்பப் பட்டு வந்தது. ஆனால் கொரோனா விஷயத்தில் இதுபோன்ற நம்பக்கைக்கு வாய்ப்பு இல்லை என்றே உலகச் சுகாதார அமைப்பு கூறியிருந்தது. இக்கருத்துக்கு சான்று அளிக்கும் வகையில் தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்தக் கருத்தை விஞ்ஞானிகள் மேலும் தெளிவு படுத்தியிருக்கின்றனர்.
ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வந்த நபர்களிடம் குறிப்பிடத்தக்க ஆன்டிபாடிகள் காணப்பட்டது எனவும் ஆனால் இரண்டு மாதம் கழித்து பின்பு ஆய்வு செய்து பார்த்ததில் ஆன்டிபாடிகள் உடலில் காணாமல் போய்விட்டது எனவும் கூறியிருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் உடலில் அந்நோய்த்தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடிகள் உண்டாகியிருக்கும். இதனால் மீண்டும் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை எனப் பொதுவாக மருத்துவர்கள் கருதி வந்தனர். சுவீடன் போன்ற நாடுகளில் இந்தக் கருத்தை நம்பி ஊரடங்கு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி மக்கள் சுதந்திரமாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதுபோன்ற நம்பிக்கை மிகவும் ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் தற்போது எச்சரித்து உள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 14 விழுக்காடு நபர்களுக்கு கொரோனா நோய்க்கு எதிராக ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு பின்பு அவர்களிடம் இருந்த ஆன்டிபாடிகள் முழுவதும் குறைந்துவிட்டது என Lancet ஆய்விதழில் கட்டுரை வெளியிடப் பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட தலைமை விஞ்ஞானி ராகுல் யோட்டி, “கொரோனா வைரஸால் உருவாகின்ற நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கத் கூடியதாக இல்லை. அது தற்காலிகமானதாகவே இருக்கிறது. அதனால் ஏற்படுகின்ற ஆன்டிபாடி உடலில் குறுகிய காலத்திற்கு மட்டுமே உள்ளது. பின்னர் அது மறைந்து போகக் கூடியதைப் பார்க்க முடிகிறது. எனவே நாம் அனைவரும் விழிப்புடன் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக அறிகுறிகளை வெளிப்படுத்தும் கொரோனா நோயாளிகளிடம் மட்டுமே ஆன்டிபாடிகள் காணப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை விஞ்ஞானிக்ள வெளியிட்டு இருந்தனர். அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களிடம் நோய்த்தொற்று எதிரான ஆன்டிபாடிகள் இருக்காது என்ற தகவல் உறுதிச் செய்யப்பட்டது. தற்போது கொரோனாவிற்கு எதிராக உடலில் உண்டாகும் ஆன்டிபாடிகள் குறைந்தது இரண்டு மாதம் வரைக்கும்தான் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் மந்தை நோய் எதிர்ப்பு போன்ற நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
சுவீடன் போன்ற சில நாடுகளில் 60 விழுக்காடு நபர்களுக்கு கொரோனா நோய்க்கு எதிரான மந்தை நோய் சக்தி உருவாக்கப் பட்டு விட்டால் நோய் தானாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என நம்பப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஒரு விஞ்ஞானி கடுமையான எச்சரிக்கை செய்துள்ளார். பாதுகாப்பு இல்லாமல் (ஊரடங்கு இல்லாமல்) இயற்கையாக மந்தைநோய் எதிர்ப்பு உண்டாக்கப்படும் என நம்புவது பெரிய ஆபத்தில் முடியும் என கூறியிருக்கிறார். இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா நோயில் இருந்து மீண்ட அனைவரின் உடலிலும் ஆன்டிபாடிகள் இருக்கும் எனச் சொல்ல முடியாது. அதனால் நோயில் இருந்து மீள்வதற்கு மந்தைநோய் எதிர்ப்பு ஆற்றல் போன்ற கருத்துகளை நம்பக்கூடாது எனத் தெரிவிக்கப் பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments