விஜய் படப்பிடிப்பில் அஜித் எண்ட்ரி ஆனதும் நடந்த அதிசயம்

  • IndiaGlitz, [Saturday,October 19 2019]

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு நண்பர்களாக நடித்த ஜிமிக்கி, மணலி பிரபு, எஸ்தர் பிரபு ஆகியோர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பல விஷயங்களை தெரிவித்தனர்.

அப்போது, ‘வேட்டைக்காரன்’ படப்பிடிப்பின்போது நடந்த அதிசய சம்பவம் ஒன்றை அவர்கள் நினைவு கூர்ந்தனர். ‘வேட்டைக்காரன்’ படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தபோது வேறொரு படப்பிடிப்பிற்காக கேரவனில் இருந்து அஜித் இறங்கியதாகவும், அங்கு விஜய் இருப்பதை அறிந்ததும் அவர் உடனே விஜய்யை பார்க்க நேராக சென்றதாவும், அஜித்தை எதிர்பாராமல் பார்த்த விஜய், உடனே அஜித்தை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் கூறினர்.

விஜய்யும், அஜித்தும் உண்மையில் நெருக்கமான நட்பில் இருக்கும்போது எதற்காக வெளியே ‘தல’ தளபதி என தினந்தோறும் மோதிக்கொள்கின்றனர் என்பது தங்களுக்கு புரியவில்லை என்றும் இருதரப்பு ரசிகர்களும் ஒற்றுமையாக இருந்தால் தல, தளபதி ஆகிய இருவரின் படங்களும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

More News

'பிகில்' கதைக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு இயக்குனர்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்!

தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ஓப்பனிங் வசூலில்

ரஜினியுடன் 40 நாள் நடித்த அனுபவம்: 'தர்பார்' நடிகையின் உற்சாக பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்

'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அந்த படத்தில் நடித்த தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர்களை பாராட்டி தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.

'இந்தியன் 2' படத்தில் கமலின் வயது: ஒரு ஆச்சரியமான தகவல்

உலக நாயகன் கமலஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது