close
Choose your channels

ஓடிடியில் 'பொன்னியின் செல்வன் 2' எப்போது? 

Sunday, May 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் ’பொன்னியின் செல்வன் 2’ படம் தான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொதுவாக புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் என்பது தெரிந்ததே. ஆனால் ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் நல்ல வசூலை செய்து கொண்டிருப்பதால் ஓடிடியில் ஒரு சில வாரங்கள் கழித்து தான் வெளியாகும் என்று கூறப்பட்டது.

அந்த வகையில் தற்போது வெளியான தகவலின்படி ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஜூன் 28-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அமேசான் பிரைம் வீடியோ இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் ’வாரிசு’ அஜித்தின் ’துணிவு’ உட்பட பல படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியான நிலையில் ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் மட்டும் இரண்டு மாதங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment