close
Choose your channels

'விடாமுயற்சி' படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொள்வது எப்போது? சுரேஷ் சந்திரா தகவல்..!

Sunday, June 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் விரைவில் த்ரிஷா மற்றும் அர்ஜூன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 'விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் அதன் பின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக 'விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்காத நிலையில் தான் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது 'விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நேற்று முதல் தொடங்கிய நிலையில் நேற்று அஜித், ஆரவ் உள்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில் ’ஜூன் 22 முதல் 'விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்றும், இந்த படப்பிடிப்பில் அடுத்த வாரம் த்ரிஷா கலந்து கொள்வார் என்றும் அதேபோல் இன்னும் சில நாட்களில் அர்ஜுன் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூலை 22ஆம் தேதி வரை அதாவது ஒரு மாதம் 'விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பும் படக்குழுவினர் மீண்டும் ஹைதராபாத்தில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹைதராபாத் படப்பிடிப்புடன் முற்றிலும் 'விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாவது உறுதி என்றும் அந்த பேட்டியில் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment