ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட விவகாரத்தில் ரஜினி, விஜய், அஜித் மெளனம் ஏன்? பிரபல இயக்குனர் கேள்வி!

ஒளிப்பதிவு சீர் திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுக்காமல் ரஜினி, அஜித், விஜய் மௌனம் காப்பது ஏன்? என பிரபல இயக்குனர் ஒருவர் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு சீர்திருத்த மசோதா கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழ் திரையுலகினர் உள்பட இந்திய திரையுலகினர் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சூர்யா, கார்த்தி, விஷால், கார்த்திக் சுப்புராஜ், ராஜூமுருகன் உள்பட பலர் தங்கள் சமூக வலைதளங்களில் ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக டுவிட்டுகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் குரல் கொடுக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? என்றும் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த விஷயத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் பாலிவுட் திரையுலகினர்களுடன் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

மேலும் சூர்யா இந்த மசோதாவுக்கு எதிராக டுவிட் செய்த போது அவருக்கு எதிராக பாஜக தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானத்தை கண்டித்து திரை உலகில் உள்ள ஒரு சங்கம் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்ற கேள்வியையும் இயக்குனர் அமீர் எழுப்பியுள்ளார்.

இயக்குனர் அமீரின் இந்த கருத்தை அடுத்தாவது ரஜினி, அஜீத், விஜய் குரல் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'பிகில்' படத்தை காண்பித்து சிறுவனுக்கு சிகிச்சை: விஜய்க்கு இவ்வளவு பவரா?

விபத்தில் காயமடைந்த 10 வயது சிறுவனுக்கு விஜய்யின் திரைப்படத்தை போட்டு காட்டி வலி தெரியாமல் சிகிச்சை செய்த டாக்டர்கள் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

லிங்குசாமி-சீமான் கதை விவகாரம்: கே.பாக்யராஜ் எடுத்த அதிரடி முடிவு!

பிரபல இயக்குனர் லிங்குசாமி தற்போது ராம் பொத்திநேனி நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் கதை, தன்னுடைய பகலவன் கதை என்றும் எழுத்தாளர்

ஆண்களை க்ளீன் போல்டாக மாற்றும் “லவ்“… இந்தக் காதல் பித்துக்கு காரணம் தெரியுமா?

ஒரு பெண் காதலிப்பதை விட, ஒரு ஆண் காதலில் விழுந்துவிட்டால் அவர் செய்யும் சேட்டையை சொல்லி மாளாது.

பிறந்த நாளில் எண்ட்ரி ஆன நடிகை ரேவதி: ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் திரை உலகின் சிறந்த நடிகைகளில் ஒருவரான ரேவதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவர் இன்று முதல் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார்.

'வலிமை அப்டேட்': யூரோ கால்பந்து போட்டியையும் விடாத அஜித் ரசிகர்கள்!

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்கும் செய்தி தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும், 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் தயாராகி விட்டதாகவும்