close
Choose your channels

பிறந்த நாளில் எண்ட்ரி ஆன நடிகை ரேவதி: ரசிகர்கள் வாழ்த்து!

Thursday, July 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் சிறந்த நடிகைகளில் ஒருவரான ரேவதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவர் இன்று முதல் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜா இயக்கிய ’மண்வாசனை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரேவதி சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் அவருடைய பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட அவர் ’நவரசா’ என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார் என்பதும் நெட்பிளிக்ஸில் இந்த தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இவர் படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ரேவதி தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முதல் ரேவதி டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ளார். இன்றைய பிறந்தநாளில் டுவிட்டரில் எண்ட்ரி ஆகி உள்ளதற்கு மகிழ்ச்சி என்று ரேவதி குறிப்பிட்டுள்ளதை அடுத்து அவரை டுவிட்டர் பயனாளிகள் வரவேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.