close
Choose your channels

ஜிபி முத்துவுக்கு பதிலாக இந்த நடிகரா? பிக்பாஸ் வீடே கலவரமாக போகுதா?

Sunday, October 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து தனது குழந்தை மற்றும் தம்பியை பார்க்காமல் தன்னால் இருக்க முடியாது என கூறி பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசனுடன் விடைபெற்றுச் சென்று விட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்ற ஜிபி முத்து திடீரென வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜிபி முத்துவுக்கு பதிலாக ஒரு கலகலப்பானவரை பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான மன்சூரலிகான் தான் ஜிபி முத்துவுக்கு பதிலாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மன்சூர் அலிகான் பிக் பாஸ் போட்டியாளர்களின் பட்டியலில் இருந்த நிலையில் கடைசி கட்டத்தில் அவருடைய பெயர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஜிபி முத்து வெளியேறியதை அடுத்து மன்சூர் அலிகான் களமிறங்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மன்சூர் அலிகான் கலகலப்பானவர் மட்டுமின்றி கலகக்காரர் கூட என்பதால் பிக்பாஸ் வீடு அவரது எண்ட்ரியால் என்ன ஆகுமோ என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos