ராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கிய பிரபல தமிழ் நடிகர் யார்?

  • IndiaGlitz, [Thursday,March 15 2018]

கோலிவுட் திரைப்படங்களில் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் நடிகை ராதிகா ஆப்தே, ரஜினியின் கபாலி படத்தில் நடித்த பின்னர் உலகப்புகழ் பெற்றார். இந்த படத்தின் வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திரையுலக வாழ்க்கை குறித்த சில விஷயங்களை மனம் திறந்து அவர் கூறினார். அப்படி அவர் கூறிய விஷயங்களில் ஒன்றுதான் பிரபல தமிழ் நடிகர் ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்ததாக கூறியது.

தமிழ் படம் ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, அந்த படத்தில் நடித்த பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தன்னிடம் வாலாட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர் யார் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார். எனினும் ராதிகா ஆப்தா தமிழில் 'கபாலி' தவிர தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிசெல்வன் என மூன்று தமிழ்ப்படங்களில் தான் நடித்துள்ளார். எனவே ராதிகாவிடம் அறை வாங்கிய அந்த பிரபல நடிகர் யார் என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்

More News

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்: புதிய அப்டேட்

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த ஆண்டு சூப்பர் ஹிட் ஆன தமிழ்ப்படங்களில் ஒன்று. இந்த படத்தை இந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது

மாஸ் குத்துப்பாட்டு, மரண தீம் மியூசிக்: விசுவாசம் இசை குறித்து டி.இமான்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு இந்நேரம் ஆரம்பித்திருக்க வேண்டியது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் மொத்த வருவாய், செலவு எவ்வளவு தெரியுமா?

தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் தமிழக சட்டமன்றத்தில் 2018-2019ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தற்போது பட்ஜெட் உரையை நிகழ்த்தி வருகிறார்.

டிடிவி தினகரனின் புதிய அமைப்பின் பெயர் அறிவிப்பு

'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்

கோலமாவு கோகிலா'வில் நயன்தாராவின் கேரக்டர் இதுதான்

கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாரா லோயர் மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளாரா