close
Choose your channels

ராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கிய பிரபல தமிழ் நடிகர் யார்?

Thursday, March 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரைப்படங்களில் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் நடிகை ராதிகா ஆப்தே, ரஜினியின் கபாலி படத்தில் நடித்த பின்னர் உலகப்புகழ் பெற்றார். இந்த படத்தின் வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திரையுலக வாழ்க்கை குறித்த சில விஷயங்களை மனம் திறந்து அவர் கூறினார். அப்படி அவர் கூறிய விஷயங்களில் ஒன்றுதான் பிரபல தமிழ் நடிகர் ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்ததாக கூறியது.

தமிழ் படம் ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, அந்த படத்தில் நடித்த பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தன்னிடம் வாலாட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர் யார் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார். எனினும் ராதிகா ஆப்தா தமிழில் 'கபாலி' தவிர தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிசெல்வன் என மூன்று தமிழ்ப்படங்களில் தான் நடித்துள்ளார். எனவே ராதிகாவிடம் அறை வாங்கிய அந்த பிரபல நடிகர் யார் என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.