என் நோக்கத்தை மீடியா திரித்துவிட்டது: 'யார் நீங்க" கேள்வி கேட்ட சந்தோஷ்

  • IndiaGlitz, [Friday,June 01 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்று அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் என்ற வாலிபர் 'யார் நீங்க' என்று கேள்வியை கேட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனதோடு #நான்தாப்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் டிரெண்ட்டுக்கு வந்தது.

இந்த நிலையில் பெரும்பாலான ஊடகங்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் ரஜினிக்கு இதுவொரு அவமானம் என்ற வகையில் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் தற்போது சந்தோஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ரஜினிகாந்திடம் 100 நாட்களாக ஏன் வரவில்லை என தான் கேட்ட நோக்கம் வேறு! ரஜினிகாந்த் பதவியில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு சக்தி வாய்ந்த மனிதர். அவர் கடந்த 100 நாட்களில் ஒருநாள் வந்திருந்தால் எங்கள் போராட்டம் உலக அளவில் சென்று வெற்றி பெற்றிருக்கும் என உரிமையுடன் கேள்வி கேட்டேன்

உண்மை இவ்வாறிருக்க மீடியாக்கள் நான் சொன்னதை தங்கள் போக்கிற்கு தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் வகையில் வேறு மாதிரி செய்தி வெளியிட்டுள்ளனர். இது எனக்கு தனிப்பட்ட முறையில் பாதிக்கின்றது என்று கூறியுள்ளார்.

More News

ரஜினிக்கு ஆதரவான கருத்தா? விஜய்சேதுபதி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

கார்த்தியின் 'தேவ்' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

அஜித், விஜய், விஜய்சேதுபதியை கலாய்க்கும் 'தமிழ்ப்படம்'

நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம்' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் 2.0' திரைப்படம் தற்போது தயாராகி

அதர்வாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'செம போத ஆகாதே' திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதர்வா தற்போது நயன்தாராவுடன்  'இமைக்கா நொடிகள்' என்ற படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துகுடியிலும் சென்னையிலும் செய்தியாளர்களை சந்தித்தார்.