சத்தியமா பத்மினி யாருன்னே எனக்கு தெரியாது.. பிரபலத்தின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த லோகேஷ்..!

  • IndiaGlitz, [Wednesday,October 18 2023]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ’லியோ’ படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரபலம் ஒருவர் பத்மினியின் காதல் கவிதை என்ற கவிதையை லோகேஷ் கனகராஜ் எழுதியிருக்கிறார் என்று சொல்ல, யார் பத்மினி என்று தொகுப்பாளி கேட்க, சத்தியமா பத்மினி யார் என்று எனக்கு தெரியாது என்று அதிர்ச்சியுடன் லோகேஷ் பதில் அளித்தார். பத்மினி பிரச்சனை கிளப்பியவர் நடிகர் ஆர்ஜே பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த வீடியோவில் ஆர்ஜே பாலாஜி கூறிய போது, ‘உன்னிடம் ஒரு கேள்வி கேட்கச் சொன்னார்கள், கேட்பதற்கு முன் மக்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். லோகேஷ் கனகராஜ் ஒரு நல்ல இயக்குனர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு நல்ல கவிஞர். அவர் ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே நிறைய கவிதை எழுதியுள்ளார், அவருக்கு கவிதைகள் எழுதுவது ரொம்ப பிடிக்கும். குறிப்பா லோகேஷ் எழுதிய பத்மினி என்ற காதல் கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும், முடிந்தால் மக்களுக்கு அந்த கவிதையை படியுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ், ஆர்ஜே பாலாஜியை ‘அட பைத்தியமே’ என்று திட்ட, ’ இந்த வீடியோ பார்த்ததும் நான் அப்படி ஒரு கவிதையே எழுதவில்லை என்று சொல்லி இருப்பாய், உலக மக்கள் பத்மினி என்ற அந்த காதல் கவிதையை பார்ப்பதற்கான, கேட்பதற்கான நாள் விரைவில் வரும் என்று தெரிவித்தார். இதையடுத்து ‘யார் அந்த பத்மினி’ என்று தொகுப்பாளினி கேட்க, சத்தியமா பத்மினி யார் என்று எனக்கு தெரியாது, அந்த பெயரில் எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை’ என்று கூறினார்.

மேலும் ஆர்ஜே பாலாஜி, ’விக்ரம்’ திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் நாம் இருவரும் சந்தித்தோம், நள்ளிரவில் நடந்த அந்த சந்திப்பின்போது நீ மிகவும் பதட்டத்துடன் இருந்ததை நான் பார்த்தேன். ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ’விக்ரம்’ படத்தை விட ’லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'விஷால் 34' படத்தின் சூப்பர் அப்டேட் வெளியிட்ட விஷால்.. வைரல் புகைப்படம்..!

விஷால் நடித்து வரும் 34வது  திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்தது.

அண்டை மாநிலத்திலும் 7 மணி காட்சி ரத்தா? விஜய் மக்கள் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தமிழகத்தில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து முதல் காட்சி 9 மணிக்கு தான்

'லியோ' படத்தை இலங்கையில் திரையிட வேண்டாம்.. தமிழ் எம்பிக்கள் கடிதத்திற்கு காரணம் என்ன?

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நாளை இந்தியா உட்பட உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டும் ஏற்பட்டுள்ளது.

செம்ம டேஞ்சர் போட்டியாளர்கள் யார் யார்? கூல் சுரேஷ் - விசித்ரா கணிப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில்  கூல் சுரேஷை அனைத்து போட்டியாளர்கள் கார்னர் செய்தனர் என்பதை பார்த்தோம்.

'லியோ' படம் பார்க்க செல்லும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி:  முக்கிய அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்க்க செல்லும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.