close
Choose your channels

மாயாவுக்கு 2ஆம் இடம் கூட கிடைக்கவில்லையா? அப்ப ரன்னர் அப் யாரு?

Sunday, January 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா என்று தகவல் நேற்றே கசிந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த போட்டியாளர்கள் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 கடந்த 105 நாட்களாக விறுவிறுப்பாக நடந்த நிலையில் இன்று கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது. இன்று மாலை விஜய் டிவியில் கிரான்ட் பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்று ஏற்கனவே தகவல் கசிந்து விட்டது. அவருக்கு சுமார் 48% வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அர்ச்சனாவை அடுத்து ரன்னர் அப் என்ற நிலையில் மாயா தான் இருப்பார் என்று பெரும்பாலானோர் கணித்திருந்த நிலையில் அந்த கணிப்பு பொய்யாகி மணி தான் ரன்னர் அப் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாயாவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்துள்ளது.

தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் நான்காவது ஐந்தாவது இடத்தை பகிர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வரலாற்றில் வைல்ட் கார்டில் வந்த அர்ச்சனா, டைட்டில் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment