ஆஸ்கார் விருதுக்கு 'பாகுபலி 2' தேர்வு செய்யப்படாதது குறித்து எஸ்.எஸ்.ராஜமெளலி

  • IndiaGlitz, [Tuesday,September 26 2017]

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 90வது ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் 'நியூட்டன்' என்ற பாலிவுட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியாகி உலகின் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படமே ஆஸ்காருக்கு இந்தியாவில் அனுப்பப்படும் படமாக இருக்கும் ஏராளமானோர் கருதியதை அடுத்து அந்தப்படம் தேர்வு செய்யப்படாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, 'ஆஸ்கார் விருதுக்கு 'பாகுபலி 2' தேர்வு செய்யப்படாதது குறித்து எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. நான் விருதுகளை குறிவைத்து அந்த படத்தை இயக்கவில்லை, அதுகுறித்து நான் சிந்திக்கவும் இல்லை. எனது ஒரே குறிக்கோள் இந்த படத்தின் கதையும் காட்சிகளும் ஒவ்வொரு பார்வையாளரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான். மேலும் வசூல் அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பு. இந்த இரண்டும் நடந்துவிட்டது.

'பாகுபலி 2' படத்திற்கு விருதுகள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேனே தவிர, விருதுகள் கிடைக்காததற்கு ஏமாற்றம் அடைய மாட்டேன்' என்று மேலும் அவர் கூறியுள்ளார்.ஆஸ்கார் விருதுக்கு இந்த படம் தேர்வு செய்யப்படவில்லை எனினும் நிச்சயம் பல தேசிய விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்திய லேடி சூப்பர்ஸ்டாரை சந்தித்த கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார்

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சமீபத்தில் அமெரிக்கா சென்றனர் என்பதும் அங்கு விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது

துப்பறிவாளன், மகளிர் மட்டும் படங்களின் தமிழக வசூல் நிலவரம்

கடந்த வாரம் வெளிவந்த விஷாலின் 'துப்பறிவாளன்' மற்றும் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாராட்டுக்களை பெற்று நல்ல ஓப்பனிங் வசூலையும் பெற்றன

லோக்கல் சரக்கா? ஃபாரின் சரக்கா? வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ்

தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் வில்லனாக நடித்த பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகனும், தனுஷின் நண்பருமான விஜய்ஜேசுதாஸ் தற்போது 'படைவீரன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த தோனியின் காதலி

சுந்தர் சியின் கனவு திரைப்படமான 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ரோலில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியிருந்தார்.

விஸ்வரூபம் 2, 'சபாஷ்நாயுடு' முடிந்த பின்னர் தான் அரசியல்: கமல்ஹாசன்

கமல்ஹாசன் வெகுவிரைவில் அரசியலுக்கு தனிக்கட்சி ஆரம்பித்து வரவிருப்பதாகவும், கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் குறித்து அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றன.