close
Choose your channels

லோக்கல் சரக்கா? ஃபாரின் சரக்கா? வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ்

Tuesday, September 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் வில்லனாக நடித்த பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் மகனும், தனுஷின் நண்பருமான விஜய்ஜேசுதாஸ் தற்போது 'படைவீரன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தை தனுஷ் பார்த்தார்.

படம் பார்த்து முடித்தவுடன் இயக்குனர் தனாவிடம் ஒரு குறிப்பிட்ட காட்சியை கூறி இந்த இடத்தில் ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், அந்த பாடலை நானே பாடி தர தயார் என்றும் கூறியதாக தெரிகிறது. உடனே இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, அந்த காட்சிக்கு ஏற்ற டியூனை கம்போஸ் செய்ய தனுஷ் அந்த பாடலை பாடியுள்ளார். 'லோக்கல் சரக்கா, ஃபாரின் சரக்கா' என்று தொடங்கும் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது தயாரிப்பில் உருவாகி வரும் 'தரங்கம்' படத்தின் நாயகனை 'மாரி 2' படத்தில் வில்லனாக்கிய தனுஷ், 'மாரி' முதல் பாகத்தில் நடித்த வில்லன் நடிகருக்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்ஜேசுதாசுடன் முக்கிய வேடத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்து வரும் 'படைவீரன்' படத்தில் அகில், அமிர்தா, மனோஜ்குமார், கவிதா, சிந்து உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மதிவாணன் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.