'சித்தி 2' சீரியலில் இருந்து ராதிகா விலகியது இதற்குத்தானா?

நடிகை ராதிகா சமீபத்தில் 'சித்தி 2’ சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற செய்தியை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'சித்தி 2’ என்ற மெகா சீரியல் இருந்து நான் வெளியேறும் முடிவை வருத்தத்துடன் எடுத்திருக்கிறேன் என்றும், இத்தனை ஆண்டுகளில் மிகச்சிறந்த உழைப்பை கொடுத்த சீரியல் இது என்பது எனக்கு பெருமையே என்றும், என்னுடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் குட் பை என்று சொல்லி அந்த சீரியல் இருந்து அவர் விலகினார்.

இந்த நிலையில் ’சித்தி 2’ சீரியல் இருந்து ராதிகா விலகியது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சிக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார் ராதிகா. அவர் சென்ற இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முழுநேர அரசியல்வாதியாக மாற ராதிகா திட்டமிட்டுள்ளதாகவும், வரும் சட்டசபை தேர்தலில் அவர் ஒரு முக்கிய தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்காக அவர் ’சித்தி 2’ சீரியல் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தேர்தல் நேரத்தில் மட்டும் பிரச்சாரம் செய்துள்ள ராதிகா தற்போது முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி… ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ் என்ட்ரி!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வீடு இல்லாத ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள்… முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அதிரடி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேருக்கு மயக்கம்… அதிர்ச்சி தகவல்!

அவசரகால அடிப்படையில் கோவேக்ஷின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது

ஓவியாவா இப்படி ஒரு டுவீட்டை போட்டது? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஓவியா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு

உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது: கமல்ஹாசன்

சாத்தூரில் நேற்று நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இறைச்சலில் அடங்கி விடக்கூடாது என்றும் உடனடி நடவடிக்கை தேவை