close
Choose your channels

ஓவியாவா இப்படி ஒரு டுவீட்டை போட்டது? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

Saturday, February 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஓவியா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு டுவீட்டுக்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவியும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்த ஒரு ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் ஓவியாவா இப்படி ஒரு ட்வீட்டை போட்டது என்று ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வரை இருக்கும் நிலையில் இன்றே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக் வைரலாக தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஓவியாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார். இது உண்மையிலேயே ஓவியா பதிவு செய்ததுதானா? அல்லது ஓவியாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு ஹேக்கர்கள் பதிவு செய்ததா? என்ற சந்தேகத்தையும் ஓவியாவின் ரசிகர்கள் கிளப்பி உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இந்த பதிவை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.