குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படவில்லையா சுரேஷ்? அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சுரேஷ்தான் வெளியேற போகிறார் என சனிக்கிழமை தகவல் வந்த போது கிட்டத்தட்ட யாருக்குமே நம்பிக்கையில்லை. சுரேஷ் அந்த வீட்டில் பலம் வாய்ந்த ஒரு போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கும் போது, அவரது தந்திரம் பலரை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் போது அவர் எப்படி வெளியேற்றப்படுவார்? என்ற கேள்வி பலரது மனதில் இருந்தது

கமல்ஹாசன் நேற்று சுரேஷ்தான் வெளியேற்றப்படுபவர் என்று அறிவிக்கப்படும் வரை பலருக்கும் இதில் நம்பிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சுரேஷ் வெளியிடப்படவில்லை என்றும் வேறு காரணத்தினால்தான் சுரேஷ் வெளியேற்றப்பட்டதாகவும் வந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று சுரேஷ் வெளியேறுவதாக அறிவிப்பு வந்த பின்னர் சனம் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ’நான் வெளியேறுவதற்கான காரணம் மிக விரைவில் தெரியவரும். அதை நானே சொல்லக்கூடாது’ என வழக்கம்போல் பொடி வைத்துப் பேசினார்

அதேபோல் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் மேடைக்கு வந்த பிறகு கமல்ஹாசனும் ’ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கம்தான் என்றும், சுரேஷ் சக்கரவர்த்தியை நான் வெளியே அனுப்பவில்லை நானாக அனுப்பினேன் என்று நம்பாதீர்கள் என்றும், அவர் வெளியே செல்வதற்கான காரணம் உள்ளேயும் இருக்கலாம் அல்லது சுரேஷ் ஆகவும் இருக்கலாம், அது என்ன என்று விவாதம் செய்யுங்கள் என்றும் அவர் கூறியதும் பெரும் மர்மமாக உள்ளது

சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த வாரம் முழுவதுமே கேப்ரில்லா விஷயத்தில் கோபித்துக் கொண்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதோடு சரியாக சாப்பிடாமலும் இருந்ததால் அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு பிக்பாஸ் அவரை வெளியேற்ற அனுமதித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

மொத்தத்தில் சுரேஷ் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படவில்லை என்றும் அவர் வெளியேறியதற்கான உண்மையான காரணம் என்ன என்று இன்னும் ஓரிரு நாட்களில் வெளியே தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

More News

திறந்த வேகத்தில் மீண்டும் மூடப்பட்ட தியேட்டர்கள்: தமிழகத்தின் நிலை என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட நிலையில் ஒரு சில திரையரங்குகளில் போதுமான பார்வையாளர்கள்

சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி!

நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 100 கிலோவுக்கு மேல் உடல் எடை இருந்ததால்

அமெரிக்காவின் முதல் Powerpuff Girl… துணை அதிபரை வாழ்த்தி மகிழும் கார்ட்டூன நெட்வொர்க்!!!

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த வார நாமினேஷனில் இத்தனை பேரா? வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த வாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டவர்கள் நாமினேஷன் சிக்குவார்கள் என்பதும் தெரிந்ததே 

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளரின் மனைவி கைது: பெரும் பரபரப்பு 

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இதே வழக்கில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியும்