'ஜீனியஸ்' படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்? சுசீந்திரன்

  • IndiaGlitz, [Friday,October 26 2018]

சுசீந்திரன் இயககத்தில் அறிமுக நாயகன் ரோஷன் நடித்த 'ஜீனியஸ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதையை விஜய், ஜெயம் ரவி உள்பட ஒருசில பெரிய நடிகர்களிடம் தான் கூறியதாகவும், அதன்பின்னர் ஒருசில காரணங்களால் அவர்கள் நடிக்கவில்லை என்றும் சுசீந்திரன் கூறியுள்ளார்.

தளபதி விஜய் இந்த கதையை கேட்டதும் கதை நன்றாக உள்ளது, நல்ல சமூக கருத்துக்களும் உள்ளது. ஆனால் தான் மனநிலை சரியில்லாதவராக நடிப்பதை தனது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும், தற்போதைக்கு ஆக்சன், காமெடி கலந்த கமர்ஷியல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக கூறியதாகவும் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'ஜீனியஸ்' கதையை ஜெயம் ரவி, அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர்களிடம் கூறியதாகவும் அவர்களும் வேறு சில காரணங்களால் இந்த படத்தில் கமிட் ஆகாததால் இறுதியில் புதுமுகமான ரோஷனை தேர்வு செய்ததாகவும் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

More News

நடுரோட்டில் ரூ.2000 கோடி: மக்கள் குவிந்ததால் சென்னையில் பரபரப்பு

ரூ.2000 கோடி ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சென்னையில் நடுரோட்டில் திடீரென பழுதாகி நின்றதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கசப்பான உண்மை குறித்து ரஜினிகாந்த் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

மீண்டும் இரட்டை வேடங்களில் சிம்பு!

'மன்மதன்' மற்றும் 'சிலம்பாட்டம்' படங்களை அடுத்து சிம்பு மீண்டும் இரட்டை வேடங்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜப்பானில் திரையிடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் - ஜிவி பிரகாஷ் படம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து

'அர்ஜூன்ரெட்டி' ரீமேக் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'அர்ஜூன்ரெட்டி' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டாகியது என்பது தெரிந்ததே.