close
Choose your channels

திருமணம் எப்போ? ரசிகர்களின் கேள்விக்கு க்யூட்டா பதிலளித்த 'ஆதிபுருஷ்' நடிகர் பிரபாஸ்!

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகராக இந்திய அளவில் பிரபலமாகி வரும் நடிகர் பிரபாஸிடம் ரசிகர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கு நடிகரான நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘ராதே ஷ்யாம்’ சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே விறுவிறுப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று இந்தப் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ரூ.500 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அதேபோல 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜுன் 16 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று திருப்பதியில் நடைபெற்றது.

இதற்காக திருப்பதி சென்ற நடிகர் பிரபாஸ் நேற்றுகாலை சுவாமி தரிசனம் செய்த பின்பு மாலையில் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். நடிகர் பிரபாஸுடன் ஹீரோயின் கீர்த்தி சனோன் உட்பட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் சிலர் நடிகர் பிரபாஸிடம் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த நடிகர் பிரபாஸ் கல்யாணம் என்றாவது ஒருநாள் நடக்கும். ஆனால் கண்டிப்பாக திருப்பதியில்தான் என்னுடைய திருமணம் நடக்கும் என்று கூறினார். ஏற்கனவே ‘பாகுபலி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா சர்மாவை நடிகர் பிரபாஸ் காதலித்து வருவதாக வதந்திகள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவலை இருவருமே மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ’ஆதிபுருஷ்’ படப்பிடிப்பின்போது அதில் நடித்த இந்தி நடிகை கீர்த்தி சனோனை நடிகர் பிரபாஸ் காதலித்து வருவதாக மீண்டும் வதந்திகள் பரவிவந்தன. இந்தத் தகவலுக்கு நடிகை கீர்த்தி சனோன் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் அவர் திருப்பதியில் திருமணம் செய்துகொள்வார் என்ற தகவல் உறுதியான நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.