பின்லாந்து போல தமிழகம் மாறணுமா...! அதிமுக-வை ஜெயிக்க வைங்க...ராமதாஸ் ...! 

  • IndiaGlitz, [Saturday,March 27 2021]

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது என சொல்லலாம். இம்முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள தண்டலம் தொகுதியில், வேட்பாளருக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியிருப்பதாவது,

சுவீடன், நார்வே, பின்லாந்து போன்ற நாடுகள் மருத்துவம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. இவை மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளன. இதைப்போல தமிழகமும் சொர்க்கபூமியாக திகழ வேண்டும் என்றால், மக்களாகியாக நீங்கள் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்கி, அதிமுக-வை ஜெயிக்க வையுங்கள் என்று பேசினார்.

இதேபோல் தருமபுரியில், பொன்னகரம் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். திமுகவிற்கு வாக்களித்தீர்கள் என்றால் தமிழகம் பின்னோக்கி சென்று விடும். நம் மாநிலத்தின் வளர்ச்சியே கேள்விக்குறியாகிவிடும். அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் ஏராளமான வளர்ச்சியை கண்டுள்ளது, எனவே பழனிச்சாமியை முதல்வராக்குங்கள் என பிரச்சாரம் செய்தார்.

More News

நேருக்கு நேர் மோத தயாரா..? ஸ்டாலினை பார்த்து எடப்பாடி காரசாரக் கேள்வி...!

அதிமுக எதுவும் செய்யவில்லை எனக்கூறும் ஸ்டாலின், என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என முதல்வர் பழனிச்சாமி நெல்லையில் பிரச்சார கூட்டத்தில் கேள்வி கேட்டுள்ளார். 

அதிமுக இதற்கு அனுமதிக்காது… இது தவறான பிரச்சாரம்… விளக்கும் அதிமுக தரப்பு!

கன்னியாகுமரி பகுதியில் கொள்கலன் (container terminal port) துறைமுகத்தை அதிமுக அரசு அமைக்கப் பேவதாக திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசி வருகிறது

இ.பி.எஸ் குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சைப் பேச்சு… வலுக்கும் எதிர்ப்பு!

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா முதல்வர் இ.பி.எஸ் குறித்து ஆபாசமாக பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சோப்புநுரை மட்டுமே உடை: டிக்டாக் இலக்கியாவின் வைரல் புகைப்படம்

டிக்டாக் இலக்கியா நடித்த 'நீ சுடத்தான் வந்தியா' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே

கே.எஸ்.ரவிகுமாரின் 'வீடு பிரச்சனை வீடியோ'வுக்கு இதுதான் காரணமா?

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஓய்வு பெறும் நேரத்தில் தான் கஷ்டப்பட்டு