close
Choose your channels

பின்லாந்து போல தமிழகம் மாறணுமா...! அதிமுக-வை ஜெயிக்க வைங்க...ராமதாஸ் ...! 

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது என சொல்லலாம். இம்முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள தண்டலம் தொகுதியில், வேட்பாளருக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியிருப்பதாவது,

"சுவீடன், நார்வே, பின்லாந்து போன்ற நாடுகள் மருத்துவம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. இவை மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளன. இதைப்போல தமிழகமும் சொர்க்கபூமியாக திகழ வேண்டும் என்றால், மக்களாகியாக நீங்கள் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்கி, அதிமுக-வை ஜெயிக்க வையுங்கள் என்று பேசினார்.

இதேபோல் தருமபுரியில், பொன்னகரம் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். திமுகவிற்கு வாக்களித்தீர்கள் என்றால் தமிழகம் பின்னோக்கி சென்று விடும். நம் மாநிலத்தின் வளர்ச்சியே கேள்விக்குறியாகிவிடும். அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் ஏராளமான வளர்ச்சியை கண்டுள்ளது, எனவே பழனிச்சாமியை முதல்வராக்குங்கள் என பிரச்சாரம் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.