மாமனார் வாங்கி வந்த மாவில் போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் உயிரிழப்பு!

  • IndiaGlitz, [Tuesday,April 07 2020]

மாமனார் வாங்கி வந்த போண்டா மாவில் போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் உயிரிழந்ததால் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் அவரது மகள் பாரதி போண்டா செய்வதற்காக மாவு வாங்கி வரச் சொன்னார். அவர் போண்டா மாவுடன் தனது தோட்டத்தில் உள்ள செடியில் அடிப்பதற்காக பூச்சிக்கொல்லி மாவும் வாங்கியுள்ளார்

இது தெரியாத அவரது மருமகள் பாரதி இரண்டுமே போண்டா மாவு என நினைத்து இரண்டையும் கலந்து போண்டா செய்துள்ளார். அந்த போண்டாவை பாரதியின் கணவர், மாமனார், மாமியார் என அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டனர். போண்டா சாப்பிட்ட சில நிமிடங்களில் திடீரென குடும்பத்தில் உள்ள அனைவரும் வாந்தி எடுத்ததை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மருமகள் பாரதி மட்டும் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 

More News

கொரோனா மருந்தை கொடுக்காவிட்டால்? இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது 

ஏப்ரல் 14ல் நல்ல செய்தி வரும்: 'மாஸ்டர்' படத்தின் மாஸ்டர் நடிகரின் டுவிட்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாக வேண்டிய இந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை மோசம்: ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் கடந்த மாதம் 26ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய வீட்டில் தனக்குத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார்

இன்று ஒரே நாளில் 15 பேர்: கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்தது சென்னை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்

நிறைமாத கர்ப்பிணிகளுக்கு இலவச வாகன சேவை செய்யும் சென்னை இளைஞர்

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி சரியாக கிடைக்காத நிலையில் சென்னையில் இளைஞர் ஒருவர் இலவச வாகன சேவை செய்து வருகிறார்.